செவ்வாய் கிரகத்தில் பயிர்செய்கை செய்வதற்கான அடித்தளம்! வெற்றி கண்ட நாசா
பூமிக்கு அப்பால் பூத்த முதல் பூ தொடர்பான தகவலொன்றை நாசா வெளியிட்டுள்ளது.
விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடும் பல்வேறு நாடுகளின் பங்களிப்பில் விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த விண்வெளி நிலையத்தில் பூமிக்கு அப்பால் பூத்த முதல் பூவான ஜின்னியா ரக பூச்செடி வளர்க்கப்பட்டுள்ளது. இந்த ஜின்னியா செடியில் பூத்த பூவே, பூமிக்கு அப்பால் பூத்த முதல் பூவாகும்.
இந்த பரிசோதனையானது 2015 இல் நாசா விண்வெளி வீரர் ஜெல் லிண்ட்கிரெனால் ஆரம்பிக்கப்பட்டது.
நாசா வெளியிட்டுள்ள அறிக்கை
மைக்ரோகிராவிட்டி எனப்படும் நுண்ஈர்ப்பு விசையில் தாவரங்களும் மலர்களும் எப்படி வளர்கின்றன என்பதை விஞ்ஞானிகள் புரிந்துகொள்ள வாய்ப்பாக நாசா விஞ்ஞானிகள் இந்த மலர்ச்செடியை சர்வதேச விண்வெளி நிலையத்தில் வளர்த்துள்ளனர்.
இந்த மலரை மலரச் செய்ததன் மூலம் விண்வெளியில் அதிக தாவரங்களை வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், விண்வெளி நிலையத்தில் வளர்ந்துள்ள ஜின்னியா பூவின் படத்தை நாசா தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளது.
இது தொடர்பாக நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், "செவ்வாய் கிரகத்திற்குச் செல்வது போன்ற எதிர்கால நீண்ட தூர பயணங்கள், மனிதர்கள் தங்கள் சொந்த உணவைப் பயிரிட வேண்டும்.
விண்வெளியில் தாவர ஆய்வு
எனவே விண்வெளியில் தாவரங்கள் எவ்வாறு வளர்கின்றன என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.
இந்த ஜின்னியா செடி, சர்வதேச விண்வெளி நிலையத்தில் காய்கறி வசதியின் ஒரு பகுதியாக சுற்றுப்பாதையில் வளர்க்கப்பட்டது.
விஞ்ஞானிகள் 1970-களில் இருந்து விண்வெளியில் தாவரங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும், சுற்றுப்பாதையில் தாவரங்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதைக் கற்றுக்கொள்வது பூமியிலிருந்து பயிர்களை எவ்வாறு வளர்ப்பது என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது.''என தெரிவித்துள்ளது.
You may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |