இங்கிலாந்தில் 70 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றம் செய்யப்பட்ட கடவுச்சீட்டுகள்
இங்கிலாந்தில் 70 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றம் செய்யப்பட்ட புதிய கடவுச்சீட்டுகளில், மன்னர் மூன்றாம் சார்லஸின் பெயர் குறிப்பிடப்பட்டு வெளிடப்பட்டுள்ளன.
இங்கிலாந்து ராணி 2ஆம் எலிசபெத் மறைவை தொடர்ந்து, அவரது மகன் சார்லஸ் இங்கிலாந்தின் மன்னராக முடி சூட்டப்பட்டார்.
இந்நிலையில் சார்லஸ் மன்னரானதை தொடர்ந்து, இங்கிலாந்து தேசிய கீதம், நாணயம் மற்றும் கடவுச்சீட்டுஉள்ளிட்டவற்றை மன்னரை முன்னிறுத்தி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
70 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றம்
அந்த வகையில், இங்கிலாந்தில் இதுவரை ‘அவளது மாட்சிமை’ என்ற பட்டத்துடன் ராணி எலிசபெத் பெயரை தாங்கி கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டு வந்தன.
தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டு, ‘அவரது மாட்சிமை’ என்ற பட்டத்துடன் மன்னர் சார்லஸின் பெயரை தாங்கி புதிய கடவுச்சீட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், புதிய வடிவமைப்புடன் தயாரான கடவுச்சீட்டுகளை அந்த நாட்டின் உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |