மணல் ஏற்றியவாறு நிறுத்தாது பயணித்த டிப்பர் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்
கிளிநொச்சியில் மணல் ஏற்றியவாறு நிறுத்தாது பயணித்த டிப்பர் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று(16.07.2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
குடமுருட்டி பகுதியிலிருந்து அனுமதிக்கப்படாத பகுதியில் மணல் ஏற்றியவாறு பூநகரி நோக்கி டிப்பர் வாகனம் பயணிப்பது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிப் பிரயோகம்
இந்த நிலையில், குறித்த டிப்பர் வாகனத்தை மறித்து சோதனையிட பொலிஸார் முயற்சித்த போது டிப்பர் வாகனம் நிறுத்தாமல் பயணித்த நிலையில் குடமுருட்டி பகுதியில் வைத்து பொலிஸார் வாகனத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, சாரதிக்கு உதவியாக பயணித்த நபர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவரது கால் பகுதியில் சிறுகாயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குணசேகரன் சதித்திட்டம், சக்தியிடம் ஜனனி சொன்ன வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது நாளைய ப்ரோமோ Cineulagam
10 ஆண்டுகள் கழித்து சொந்த ராசியில் நுழையும் ராகு! பணத்தை மூட்டைகளில் அள்ளப்போகும் 3 ராசிகள் Manithan
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri