தீ விபத்தில் பலியான தீயணைப்பு வீரர்-உலக செய்திகள்
கொலம்பியாவில் எரிபொருள் கொள்கலன் வெடித்து தீப்பிடித்ததில் தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொலம்பியாவின் வடக்கு பகுதியில் உள்ள பாரன்கில்லா துறைமுகம் அருகில் உள்ள ஒரு கம்பெனியில் இருந்த எரிபொருள் கொள்கலன் நேற்று(22.12.2022) இரவு திடீரென வெடித்து சிதறி தீப்பிடித்தது.
இதனால் தொழிலாளர்கள் அவசரம் அவசரமாக அப்பகுதியை விட்டு வெளியேறினர்.
தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அருகில் உள்ள எரிபொருள் கொள்கலன்களில் தீ பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் தீயணைப்பு பணியின்போது ஒரு தீயணைப்பு வீரர் உயிரிழந்துள்ளார்.
மூன்று நாட்களில் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என தீயணைப்பு துறை கூறி தெரிவித்துள்ளது.

சரிகமப Li’l Champs சீசன் 4ல் வெற்றிப்பெற்றவர்களுக்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? Cineulagam
