சர்வதேச நீதி கோரி யாழில் இன்று தீப்பந்தப் போராட்டம்
பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் இன்று தீப்பந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழகம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகம் மாணவர்களால் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் யாழ். நல்லூரில் மேற்படி தீப்பந்தப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
சர்வதேச மகளிர் தினமான இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி., அக்கட்சியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் எம்.பி., முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.


அமெரிக்கா கனடாவின் கூட்டாளர் அல்ல... ரஷ்யாவைவிட மிகப்பெரிய அச்சுறுத்தல்: ஆய்வு முடிவுகள் News Lankasri
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
மயில் அனுப்பிய மெசேஜ், கடுப்பான செந்தில் மீனாவிற்கு கொடுத்த வார்னிங்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam