யாழில் குப்பைக்கு வைத்த தீயினால் ஏற்பட்ட அனர்த்தம் - எரிந்து நாசமாகிய பல ஏக்கர் புற்தரை
கடுங்காற்று காரணமாக தீ பரவல் சம்பவம் ஒன்று அச்சுவேலி தீர்த்தங்குளம் (வல்லை களப்பு) பகுதியில் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று(12.06.2026) இரவு இடம்பெற்றுள்ளது.
யாரோ ஒருவர் குப்பைகளை மூட்டிய தீ களப்பு முழுவதும் பரவி இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.
மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்கள்
கடும் காற்று காரணமாக பல ஏக்கர் புற்தரைகள் மற்றும் சிறிய உயிரினங்களின் வாழ்விடமான களப்பு பகுதி பாரியளவில் எரிந்துள்ளது.

இது தொடர்பில் பிரதேச மக்கள் அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸார் இணைந்து தீயை கட்டுப்படுத்த முயற்சி செய்துள்ளனர்.
பின்னர் யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் இரண்டு வரவழைக்கப்பட்டு தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.



90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam