பிலியந்தலையில் தீப்பரவல்: முழுமையாக தீக்கிரையான இரண்டுமாடி கட்டடம்
பிலியந்தலை - தொலே மயானப்பகுதியில் இரண்டு மாடிக்கட்டட வீடொன்றில் இயங்கி வந்த வாகன உதிரிப்பாக உற்பத்தி நிலையமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த கட்டடம் முழுமையாகத் தீக்கிரையாகியுள்ளதுடன், பெருமளவிலான வாகன ஃபைபர் பாகங்கள் மற்றும் பல தளபாடங்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
சம்பவ இடத்துக்கு விரைந்த தெஹிவளை - கல்கிசை மாநகர சபையின் மூன்று தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் ஒரு மணித்தியாலத்திற்குள் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தினால் எவ்வித உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை எனவும் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri
