கிளிநொச்சியில் சற்று முன்னர் தீ விபத்து! பல லட்சம் பெறுமதியான வாகனங்கள் தீயில் எரிந்து நாசம்
கிளிநொச்சி- திருநகர் பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் பெறுமதியான வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளது.
குறித்த சம்பவமானது இன்றையதினம்(31.10.2026) இடம்பெற்றுள்ளது.
தனியார் சாரதி பயிற்சி பாடசாலையின் உரிமையாளர் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து, கயஸ், மோட்டார் சைக்கிள் என பெறுமதியான வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணை
குறித்த விடயம் தொடர்பாக கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவினருக்கு வழங்கப்பட்ட தகவல் அமைப்பாக குறித்த பகுதிக்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

வீட்டு உரிமையாளர்கள் வீட்டில் இல்லாத நிலையிலே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.