மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தீர்த்தக்கேணி பகுதியில் தீபரவல்
மட்டக்களப்பு - மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தீர்த்தக்கேணியின் ஒரு பகுதியில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
இன்று மாலை வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தீர்த்தக்கேணியின் ஒரு பகுதியில் காணப்படும் நாணல்புல் பகுதியில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக மட்டக்களப்பு நகர் முழுவதும் புகை பரவியுள்ளதுடன் தீயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மட்டக்களப்பு மாநகரசபையின் தீயணைக்கும் பிரிவினர் முன்னெடுத்தனர்.
தீபரவல் ஏற்பட்டமைக்கான காரணம்
இதன்போது தீ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டதுடன் தீர்த்தக்கேணியின் ஒரு பகுதியிலிருந்த நாணல்புல் தொகுதிகளும் அதிலிருந்த உயிரினங்களும் அழிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீபரவல் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் தெரியவராத நிலையில், இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



