பிரான்சில் மளிகை பொருட்கள் விற்பனையக கட்டிடத்தில் தீ விபத்து: 7 பேர் பலி
பிரான்சின் தென்பகுதியில் உள்ள மளிகை பொருட்கள் விற்பனையக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 7 பேர் பலியாகியுள்ளனர்.
அத்துடன் இருவரைக் காணவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பைரெனிஸ் ஓரியென்டெல்ஸ் என்ற இடத்தில் நேற்று அதிகாலை 2 மணியளவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
இரண்டு மாடிக் கட்டிடத்தின் தரை தளத்தில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு தீயாகப் பரவி அருகில் உள்ள கட்டிடங்களுக்கும் பரவியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வெடிப்புக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.
எனினும் எரிவாயு கொள்கலன்களின் வெடிப்பே இதற்கான காரணம் என்று
சந்தேகிக்கப்படுகிறது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

நயன் வீட்டில் மட்டுமல்ல செல்வராகவன் வீட்டிலும் விசேஷம்! கோயிலில் இருந்து வெளியான புகைப்படம் Manithan
