காசல்ரி நீர்தேக்கப்பகுதியில் தீ வைப்பு: நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்!
நாட்டின் மின் உற்பத்திக்கு பாரிய அளவில் பங்களிப்பு செய்யும் காசல்ரி நீர்தேக்க பகுதியில் அடையாளம் தெரியாதவர்களால் தீ வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த தீ வைப்பு சம்பவம் இன்று (21.08.2023) காசல்ரி நீர்தேக்கத்தின் அணைக்கட்டுக்கு சமீபமாகவுள்ள வனப்பாதுகாப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த தீ பரவல் காரணமாக சுமார் 02 ஏக்கர் வரை எரிந்து நாசமாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயணைப்பு நடவடிக்கைகள்
மேலும், தீயினை கட்டுப்படுத்துவதற்கு மின்சார சபையின் ஊழியர்கள்,மற்றும் இராணுவ அதிகாரிகள், பிரதேச வாசிகள் இணைந்து தீயினை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலையினை தொடர்ந்து நீரேந்து பிரதேசங்களிலும் வறட்சி நிலவி வருகின்றன இதனால் காசல்ரி மௌசாக்கலை,உள்ளிட்ட பிரதான நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் குறைந்து வருகின்ற நிலையில் நீர்மின் உற்பத்திக்கும் பாதிப்பு ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே வனப்பிரதேசங்களுக்கு தீ வைப்பதனை உடன் நிறுத்துமாறு சூழல் பாதுகாப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





படப்பிடிப்பில் கொண்டாட்டத்தில் இறங்கிய கார்த்திகை தீபம் சீரியல் பிரபலங்கள்... என்ன ஸ்பெஷல், போட்டோஸ் இதோ Cineulagam
