யாழ்ப்பாணம்- சவுக்கம் காட்டிற்கு விசமிகளால் தீ வைப்பு
யாழ்ப்பாணம்- சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
உடனடியாக தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை எனில் முழுமையாக சவுக்கங்காடு ஏரிந்து நாசமாக்கும் அபாய நிலை காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
தீ வைப்பு
எனவே விரைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து சவுக்கம் காட்டை பாதுகாப்பதற்கு உரிய தரப்புக்குள் உதவுமாறு பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் திரு அகஸ்டின் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது கிராம மக்கள் நலன் விரும்பிகள் பலர் தீயை அணைக்கின்ற முயற்சி ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற போதும் தீ விளாசி எரிவதால் அதனை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இன்று மதியம் 12 மணியளவில் விசமிகளால் தீவைக்கப்பட்டிருந்த நிலையில் சம்பவ இடத்துக்குச் சென்ற வட்டார பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் குறித்த விடயம் தொடர்பில் பிரதேச சபை, பிரதேச செயலகங்கள், பொலிஸார், இராணுவம் உட்பட பலருக்கும் அறிவித்திருந்தார்.
கட்டுப்படுத்த நடவடிக்கை
இந்தநிலையில் பிற்பகல் 5:15 மணிக்கு பின்னரே தீயை அணைக்கும் நடவடிக்கைக்கு மருதங்கேணியிலிருந்து இராணுவத்தினர் சுமார் 30 பேர் வரை வருகதந்து தீயை கட்டுப்படுத்துவதற்கு மனிதவலு மூலம் தீயை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
குறித்த இடத்தில் மருதங்கேணி பொலிஸார் நிலைய பொறுப்பதிகாரியும் வருகை தந்துள்ளார். குறித்த பகுதி பாரிய புகைமண்டலமாக காட்சியளிக்கிறது.
மோசடியில் ஈடுபடும் மட்டக்களப்பு அரச திணைக்கள சாரதிகள்..! ஈ.பி.டி.பி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குற்றச்சாட்டு
148 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளோம் - நேபாளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட தேச மங்கையற்கரசி News Lankasri