ஹட்டன் வனப்பகுதி தீக்கிரை: அடையாளம் தெரியாதவர்களுக்கு எதிராக விசாரணை
ஹட்டன் - மல்லியைப்பூ வனப்பகுதி அடையாளம் தெரியாதவர்களால் வைக்கப்பட்ட தீக்காரணமாக பல ஏக்கர் தீக்கிரையாகி உள்ளதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று(18.01.2026)இரவு இடம்பெற்றுள்ளது.
திடீர் தீ பரவல்
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்லியைப்பூ வனப்பாதுகாப்பு பிரிவில் ஏற்பட்ட தீ காரணமாக எமது நாட்டுக்கே உரித்தான அரியவகை தாவரங்கள், மருத்துவ செடிகள், சிறிய உயிரினங்கள் ஆகிய அழிவடைந்து இருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது மலையகப்பகுதியில் கடும் வரட்சியான கால நிலையுடன் காற்றும் காணப்படுவதனால் தீ வேகமாக பரவியுள்ளது. இதன் காரணமாக தீயினை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த தீப்பரவல் இரவு வேளையில் ஏற்பட்ட பனிப்படிவு காரணமாக தற்போது கட்டுப்பாட்டுக்கு தானாகவே வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீ வைப்பு, பொழுதுபோக்குகாகவோ அல்லது மிருகங்களை வேட்டையாடுவதற்காகவோ அல்லது விறகு சேகரிப்பதற்காகவோ வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில், மலையகப்பகுதியில் வரட்சியான காலங்களில் தீ வைக்கப்படுவதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் இவ்வாறு காடுகளுக்கு தீ வைப்பவர்களை உடன் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள் News Lankasri