ஹட்டன் வனப்பகுதிகளில் தீ விபத்து! பொதுமக்கள் விசனம்
தோட்டத் தொழிலாளர்கள் குடிநீர் பெற்றுக்கொள்ளும் வன பாதுகாப்புப் பகுதியில் அடையாளம் தெரியாதவர் தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சுமார் 25 ஏக்கர் அளவிலான பாதுகாப்பு வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (03.03.2026) ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன்–பதுளை பிரதான புகையிரத பாதையின் 106 மைல் பகுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வறட்சியான காலநிலை மற்றும் பலத்த காற்று காரணமாக தீ வேகமாக பரவி வருவதாகவும், இதனால் தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ பரவலால் தோட்டத் தொழிலாளர்கள் குடிநீர் பெற பயன்படுத்திய நீர்க்குழாய்கள் சேதமடைந்துள்ளதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
குடிநீர் பற்றாக்குறை
மேலும், இப்பகுதிக்கு உரிய அரிய வகை தாவரங்கள், சிறிய உயிரினங்கள், பறவைகள் மற்றும் மூலிகைகள் உள்ளிட்ட பல பெறுமதியான இயற்கை வளங்கள் அழிந்திருக்கக்கூடும் என்ற அச்சமும் வெளியிடப்பட்டுள்ளது.

மலையகப் பகுதிகளில் நிலவும் வறட்சியான காலநிலையால் பல இடங்களில் வனப்பகுதிகளில் தீ வைக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், இதனால் நீரூற்றுகள் வற்றிப் போகும் அபாயம் உருவாகி, கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படக்கூடும் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
காடுகளுக்கு தீ வைக்கப்படுவதால், வனவிலங்குகள் நீர் மற்றும் உணவு தேடி மனிதர்கள் வாழும் பகுதிகளை நோக்கி வரக்கூடிய சாத்தியம் உள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே, காடுகளுக்கு தீ வைக்கும் நபர்களை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 9 மணி நேரம் முன்
அப்போ வெளியே தெரியாத விஷயம்... விஜய் - திரிஷா சர்ச்சை குறித்து ஓபனாக பேசிய வனிதா விஜயகுமார்! Manithan
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri