மலையக தொடருந்து பாதையை அண்டிய வனப்பகுதியில் தீப்பரவல்!
ஹட்டம் மற்றும் ரொசல்ல தொடருந்து நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
குறித்த தீ விபத்து நேற்று (26.02.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதேசத்தில் நிலவும் கடும் வறண்ட வானிலையுடன், புகையிரத பாதையை அண்டியுள்ள தேயிலைத் தோட்டங்களில் வசிக்கும் மக்கள் அந்தப் பாதையூடாக பயணிக்கின்றனர்.
தீப்பரவல் அதிகரிப்பு
அவ்வாறு பயணித்த எவரேனும் இந்த வனப்பகுதிக்கு தீ வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மலையகத்தில் தொடரும் வரட்சியான காலநிலையால் காடுகளுக்கு தீ வைக்கும் விஷமச் செயல்கள் அதிகரித்துள்ளன.

இதன்படி, தலவாக்கலை, நானுஓயா, ஹட்டன் மற்றும் பொகவந்தலாவை பிரதேசங்களில் காட்டுத் தீ பரவல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், கடந்த நாட்களில் ஏற்பட்ட தீ பரவல்களால் பல ஏக்கர் காடுகள் எரிந்துள்ளதுடன், இவ்வாறு தீ வைக்கும் செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெறுவதால் நீரேந்தும் பகுதிகளில் நீர் வற்றி காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
