கிளிநொச்சியில் மர தளபாட உற்பத்தி நிலையத்தில் திடீர் தீ விபத்து
கிளிநொச்சி- உதயநகர் பகுதியில் உள்ள மரத்தளபாட உற்பத்தி நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தீ விபத்தானது நேற்றையதினம்(1) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், மரத்தளபாட உற்பத்தி நிலைய உரிமையாளர் மாலை மரத்தளபாட உற்பத்தி நிலையத்தை பூட்டி விட்டு வீடு சென்ற நிலையில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து
இதனையடுத்து, தீ பரவலை அவதானித்தவர்கள் உரிமையாளருக்கு அறிவித்த நிலையில் உரிமையாளரினால் கரைச்சி பிரதேச சபை தீயணைப்பு பிரிவுக்கு தெரியப்படுத்தப்பட்டது.
இந்தநிலையில், பிரதேச சபை தீயணைப்பு வாகனம் வருகை தந்தும் பெரும் முயற்சியின் பின்பு மக்களும் சேர்ந்து தீ பரவலை பல மணி நேரத்திற்கு பின்பு கட்டுப்படுத்தினர்.
சில இயந்திரங்கள் மற்றும் தளபாடங்கள் செய்வதற்காக வைத்திருந்த பெறுமதியான மரங்கள் தீயினால் எரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








