அரச வைத்தியசாலைக்குள் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்து
கஹவத்த ஆதார வைத்தியசாலையில், பயன்பாடற்ற பொருட்களைச் சேமித்து வைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட கட்டிடமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று (17) அதிகாலை சுமார் 3:45 மணியளவில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பரவிய தீயை அணைக்க, இரத்தினபுரி மாநகர தீயணைப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர்.
மின் துண்டிப்பு
தீ விபத்துக்குள்ளான இந்தக் கட்டிடம், முன்னதாக உள்நோயாளிகள் வார்டு பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும், புதிய கட்டிடம் கட்டப்பட்டதைத் தொடர்ந்து அந்த அங்கிருந்து மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. மின்சாரக் கோளாறு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மின்சார சபையினர் இன்று அதிகாலை சுமார் 4:00 மணியளவில் அப்பகுதிக்கான மின் இணைப்பைத் துண்டித்தனர்.