நுவரெலியாவில் பலசரக்குக் கடையில் தீ விபத்து
நுவரெலியா பிரதான நகரில் பலசரக்கு கடை ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது.
குறித்த சம்பவம் இன்று (12) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கடையில் உட்பகுதியில் வெல்டிங் வேலைகள் இடம்பெற்ற பொழுது வெல்டிங் செய்த தீப்பொறிகள் தெறித்து அருகில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் பட்டு, உடனடியாக பட்டாசுகள் தீப்பற்றிக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தீ விபத்து
அத்துடன் பாரிய வெடிச் சத்தங்களுடன் தீ பற்றியதால் கரும்புகை வெளியாகி மக்கள் அசௌகரியத்தை எதிர்கொண்டனர்.

தீயை கட்டுப்படுத்த நுவரெலியா மாநகரசபை தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதுடன் ஏனைய வர்த்தக நிலையங்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
பொலிஸார் விசாரணை
தீ விபத்தால் களஞ்சிய பகுதியில் வைக்கப்பட்டிருந்த வெங்காயம் , கோதுமை மா அரிசி, உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தீயில் கருகி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


குணசேகரன் சதித்திட்டம், சக்தியிடம் ஜனனி சொன்ன வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது நாளைய ப்ரோமோ Cineulagam
சக்திக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஜனனிக்கு சவால்விடும் அன்புக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
நடிகர் அபிநய் உடன் 4 நாட்கள் ஒரே வீட்டில் இருந்த நடிகை.. தினமும் குடிப்பது பற்றி அவர் சொன்ன காரணம் Cineulagam