கம்பஹா மாவட்டத்தின் பொலிஸ் நிலையமொன்றில் தீ விபத்து
கம்பஹா மாவட்டத்தின் வெயாங்கொடை பொலிஸ் நிலையத்தில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
வேயாங்கொடை பொலிஸ் நிலையத்தின் பழைய பொருட்கள் மற்றும் புத்தகங்களை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த அறை, இன்று(31.12.2024) பிற்பகல் தீவிபத்தில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
அதன் காரணமாக பழைய முறைப்பாட்டுப் புத்தகங்கள் உள்ளிட்ட ஏராளம் ஆவணங்கள் தீயில் எரிந்து அழிந்து போயுள்ளன.
தீயணைப்பு
அத்துடன், போக்குவரத்துப் பிரிவு, சமூக பொலிஸ் பிரிவு, சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு உள்ளிட்ட பொலிஸ் பிரிவுகளின் அறைகளும் சிறு அளவில் சேதமடைந்துள்ளன.

கம்பஹா மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் பலத்த முயற்சியின் பின்னர் தீயை அணைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்தின் காரணமாக எந்தவொரு நபருக்கும் உயிரிழப்புகள் அல்லது பாதிப்புகள் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
    
    
    
    
    
    
    
    
    
    ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
    
    Bigg Boss 9: தெறிக்க விட்ட திவ்யாவையே வாயடைக்க வைத்த திவாகர்... எதிர்பாராத பிக் பாஸ் ப்ரொமோ Manithan
    
    Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan