மட்டக்களப்பில் பாரிய தீ விபத்து : 50 லட்சம் பெறுமதியான பொருட்கள் சேதம்
மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட நகர் பகுதி உள்ள மூன்று மாடி கட்டிடத்தில் மேற்தளத்தில் பாரிய தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
நேற்றையதினம் ஏற்பட்ட இந்த தீ விபத்தின்போது 50 லட்சம் பெறுமதியான பொருட்கள் எரிந்து முற்றாக சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் உள்ள மூன்று மாடி கட்டிடத்தில் மேற்களத்தில் பாரிய தீ விபத்து சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
விபத்திற்கான காரணம்
இதனையடுத்து உடனடியாக மாநகர சபை தீயணைப்புபடை பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து அவர்கள் தீயை கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
இருப்பினும் தீயணைப்பு படை பிரிவு வருவதற்கு முன்னரே பூட்டி இருந்த வீட்டிலே உள்ளிருந்த மின்சார உபகரணங்கள் விலை உயர்ந்த வீட்டின் தளபாடங்கள் அனைத்தும் தீயில் கருகியுள்ளன.
இதனால் சுமார் 50 லட்சம் பெறுமதியான பொருட்கள் எரிந்துள்ளன. மின் கசிவு காரணமாக தீ விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்து தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் மக்களை அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |