கொழும்பில் ஏற்பட்ட தீ விபத்து.. வெளியான தகவல்கள்!
புதிய இணைப்பு
கொழும்பு - ராஜகிரியவில் உள்ள ஒரு விழா மண்டபத்தில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
அழகுக்கலை நிபுணர் சந்திமல் ஜெயசிங்க என்பவர், ஏற்பாடு செய்திருந்த புத்தாண்டு இளவரசர் மற்றும் இளவரசிக்கான இறுதிப் போட்டி நிகழ்விலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தீ விபத்து ஏற்பட்டவுடன், அங்கிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டதுடன் தீயணைப்பு வீரர்கள் தலையிட்டு தீயை அணைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பின்னர், தீ கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், சம்பவத்தில் பாரியளவிலான பணம் விரயமாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
கொழும்பு - ராஜகிரியவில் உள்ள ஒரு விழா அரங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அங்கு நடைபெற்ற ஒரு விழாவின் போது தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கட்டுபாட்டு நடவடிக்கைகள்
இந்நிலையில் அங்குள்ள மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தற்போது ஈடுபட்டுள்ளனர், மேலும் பல தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
Pictures - Gagana



