யாழ்ப்பாண வைத்தியசாலையில் தீ விபத்து: நேரில் சென்று பார்வையிட்ட கஜேந்திரகுமார் எம்.பி
யாழ்ப்பாண வைத்தியசாலையில் தீ விபத்தினால் எரிந்து போன மருந்து களஞ்சியசாலையை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
யாழ் . போதனா வைத்தியசாலைக்கு சென்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வைத்தியசாலை சேவைகள் தொடர்பில் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி உடன் கலந்துரையாடினார்.
அத்துடன் அண்மையில் தீ விபத்திற்கு உள்ளான மருந்து களஞ்சிய சாலையையும் பணிப்பாளருடன் சென்று பார்வையிட்டார்.
தீ விபத்து
அதனை தொடர்ந்து தீ விபத்து தொடர்பான விசாரணைகள் தொடர்பிலும் , மருந்துகள் எடுத்து வரப்படுவது தொடர்பிலும் தற்போதைய தேவைகள் தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டறிந்து கொண்டார்.

கடந்த 09ஆம் திகதி அதிகாலை போதனா வைத்தியசாலை மருந்து களஞ்சியசாலை ஏற்பட்ட தீ விபத்தினால் களஞ்சிய சாலையில் இருந்த 60 வீதமான மருந்துகள் தீயில் எரிந்து நாசமாகி பல மில்லியன் ரூபாய் சொத்திழப்பும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan