வாழைச்சேனையில் தீ விபத்து - வீடு முற்றாக சேதம்
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாழைச்சேனை ஹைராத் வீதியில் உள்ள வீடு தீயினால் சேதமடைந்த சம்பவம் நேற்றிரவு(3) இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாழைச்சேனை ஹைராத் பள்ளிவாசலுக்கு முன்பாக உள்ள மிக்ஸர் வியாபார நிலைய உரிமையாளரின் வீடே தீயினால் சேதமடைந்துள்ளதுடன், வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தீயினால் உயிர் ஆபத்து எதுவும் இடம் பெறவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீயினால் வீட்டின் அறை முற்றாகச் சேதமடைந்துள்ளதுடன், வீட்டிலிருந்த மின் பாவனைப் பொருட்கள், பெறுமதிமிக்க வீட்டுப் பொருட்கள், பிள்ளைகளின் கல்வி உபகரணங்கள் மற்றும் ஒரு தொகை பணம் என்பன தீயினால் முற்றாகச் சேதமடைந்துள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
வீட்டின் உரிமையாளர் வியாபார நடவடிக்கையிலிருந்ததாகவும், குடும்பத்தார் உறவினரின் வீட்டிற்குச் சென்ற சமயம் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் தெரியவில்லை என்றும் வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
தீ எவ்வாறு ஏற்பட்டது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam
