தும்பு தொழிற்சாலையில் தீ விபத்து: பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் தீயில் நாசம் (Photos)
புத்தளம் மதுருகம பகுதியில் தும்பு தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட தீயினால் இயந்திரங்கள் உற்பட பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் தீயில் கருகி நாசாமாகியுள்ளன.
இந்த சம்பவம் இன்றையதினம் (15.07.2023) பதிவாகியுள்ளது.
தொழிற்சாலையை அண்டிய காட்டுப் பகுதியில் பாரிய அளவில் தீப்பரவியுள்ளது. இதனை அவதானித்த கிராம மக்கள் உடனடியாக புத்தளம் நகரசபை மற்றும் தம்பபண்ணி கடற்படையினருக்குத் தகவலை வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயனைக்கும் படையினரும் கிராம மக்களும் இனைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இருப்பினும் இந்த தீயினால் பல இலட்சம் பெறுமதியான இயந்திரம் ஒன்றும் தீக்கரையாகியுள்ள நிலையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிக்காக வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் பெறுமதியான தேங்காய் மட்டைகள், தேங்காய் தும்பு ஆகியன தீயில் கருகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ இன்ஸி சிமெந்து தொழிற்சாலைக்குச் சொந்தமான காணியில் இனந்தெரியாத நபரினால் வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் காற்றில் பரவி தும்புத் தொழிற்சாலையை பாதித்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக
தெரிவித்துள்ளனர்.





உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 16 மணி நேரம் முன்

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

கணவன் உடலை டிரம்மில் வைத்து அடைத்த நிலையில்.., மணமக்களுக்கு பிளாஸ்டிக் டிரம் பரிசளித்த நண்பர்கள் News Lankasri
