தமிழ் மக்களின் நிலையை மேம்படுத்த பின்லாந்து தொடந்தும் அழுத்தம்!
இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நிலையை மேம்படுத்த பின்லாந்து தொடந்தும் அழுத்தங்களை கொடுக்கும் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் செயலாளருமான செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச இராஜதந்திர கவுன்சில் (ஐடீசிரிஈ) ஏற்பாட்டில் பினலாந்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர் நேற்று (12.0.2022) பின்லாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் பெக்கா காவிஸ்தோ உள்ளிட்ட அரசின் முக்கிய பிரமுகர்களையும், வெளிநாட்டமைச்சின் கொள்கை வகுப்பு பிரிவு அதிகாரிகளையும், ஆசிய அமெரிக்க பிரதிநிதிகளையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த கலந்துரையாடல் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பின்லாந்து அரசாங்கம்
அவர் மேலும் கூறுகையில்,
“தமிழர் தாயகத்தில் எமது மக்கள் படும் இன்னல்கள் தொடர்பிலும், இலங்கை அரசாங்கத்தின்
கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு தொடர்பிலும் தெளிவாக அவர்களுக்கு
தெரியப்படுத்தியிருந்தேன்.
தாயகத்தில் தமிழ் மக்கள் படும் துன்பங்கள் பின்லாந்து அரசாங்கத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை மேம்படுத்த பின்லாந்து - ஜெனிவா மனிதவுரிமை பேரவையில் தனது தெளிவான அழுத்தங்களை கொடுக்கும் என அவர்கள் எமக்கு தெரிவித்திருந்தனர்.
இன அழிப்பு
அத்துடன், மனித உரிமை மேம்பாட்டு விடயங்கள் சார்ந்து பணியாற்றும் முக்கியமான
அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளேன்.
அவர்களும் தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கு எதிரான கட்டமைக்கப்பட்ட இன அழிப்பிற்கு நீதி கோரி சந்திப்புகளை நடத்தி வருகின்றனர்.
குறித்த சந்திப்புகளில் சர்வதேச இராஜதந்திர கவுன்சிலின் (ஐடீசிரிஈ) பின்லாந்து பிரதிநிதிகளும் கலந்து
கொண்டிருந்தனர்” என குறிப்பிட்டுள்ளார்.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
