கிளிநொச்சியில் மது போதையில் வாகனம் செலுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை
கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் மதுபோதையில் வாகனம் செலுத்துவோருக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கமைய, மது அருந்திவிட்டு வாகனம் செலுத்துவோருக்கு சுமார் 80 ஆயிரம் ரூபாய் வரை தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கையின் போது, வரி பத்திரம், காப்புறுதி மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத நிலையில் மதுபோதையில் வாகனம் செலுத்துவோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றிலும் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
வழக்கு பதிவு
மேலும், சாரதி அனுமதிப்பத்திரம் இன்றியும் மது போதையில் வாகனம் செலுத்துவோருக்கு 55 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் சாரதி அனுமதி பத்திரங்கள் ஒரு மாத காலத்துக்கு இடை நிறுத்தி வைக்கப்படலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேற்படி குற்றச்சாட்டுகளுடன் தொடர்புற்ற நான்கு நபர்கள் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |