நிதி மோசடி விடயத்தில் சிக்கிய ஆணையாளர்! கிழக்கு மாகாண ஆளுநரின் அதிரடி நடவடிக்கை
மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் மா.தயாபரன் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாநகர சபையில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு அது நிரூபிக்கப்பட்டதால் கிழக்கு மாகாண ஆளுநரால், அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சட்டத்துக்கு விரோதமான முறையில் காணிகளை பெயர் மாற்றம் செய்துள்ளதுடன், கட்டட அனுமதிகளைகளையும் வழங்கியுள்ளதாகவும் அதற்காக பெருமளவிலான பணத்தினை இலஞ்சமாக பெற்றுக் கொண்டுள்ளதாகவும், மாநகர சபையின் பொது தேவைகளுக்கு என வர்த்தகர்களிடம் இருந்து கொந்துராத்துகாரர்களிடமிருந்தும் நிதி சேகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் நிர்வாக சுற்றறிக்கைகளை மீறி நான்கு வாகனங்களை தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்தியதுடன், பூங்காக்களில் புகைப்படம் எடுப்பதற்காக பல்லாயிரம் ரூபாய்களை போலி பற்றுச்சீட்டினை அச்சிட்டு அறவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது விடயமாக ஆளுனருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டதை தொடர்ந்து ஆளுநரினால் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு அதன் படி இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.




புதிய சாதனை படைத்த அனிருத்தின் சென்னை இசை நிகழ்ச்சி.. 45 நிமிடத்திற்குள் அனிருத்தின் #Hukum புதிய சாதனை Cineulagam
