அருண் தம்பிமுத்துக்கு எதிரான நிதி மோசடி வழக்கு ஒத்திவைப்பு
அருண் தம்பிமுத்து எதிரான நிதி மோசடி வழக்கு விசாரணை எதிர்வரும் ஐப்பசி மாதம் 9ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர் தமிழர்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு அந்த பணத்தினை தனது சொந்த தேவைக்காக பயன்படுத்தி மோசடி செய்தமைக்காக, பணம் வழங்கிய புலம்பெயர் தமிழர்களினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
வழக்கு தொடர்பான விசாரணைகள்
குறித்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்றைய தினம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டு நீதவான் நீதிபதி தர்ஷினி தலைமையில் குறித்த வழக்கு விசாரணை நடைபெற்றது.
வழக்கு தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் ஐப்பசி மாதம் 9ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் முதலீடுகளை செய்ய முனையும் புலம்பெயர் தமிழர்களை இவ்வாறு ஏமாற்றி மோசடி செய்வது எதிர்காலத்தில் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்பவர்களை அச்சமடைய செய்யும் என குறித்த வழக்கினை தாக்கல்செய்த புலம்பெயர் தொழிலதிபரான கிறிஸ்டி குணரெட்னம் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




