அஸ்வெசும பயனாளிகளின் கோடிக்கணக்கான நிதி மோசடி - அதிகாரிகளின் பிணை நிராகரிப்பு

Sri Lanka Sri Lanka Government Crime Law and Order Aswasuma
By Thiva Aug 11, 2026 11:26 AM GMT
Report

நோர்வூட் பிரதேச செயலகத்தில் 1 கோடியே 62 இலட்சம் இடம்பெற்ற அஸ்வெசும பயனாளிகளின் நிதி மோசடி செய்த சந்தேகத்துக்குரிய அதிகாரிகள் இருவரின் பிணை அனுமதியை நீதிமன்றம் நிராகரித்துள்ளதுடன், விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று(11.08.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே ஹட்டன் நீதவான் நீதிபதி பீட்டர் பால் மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு

எமது நாட்டில் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்ட ஏழை மற்றும் முழுமையாக இயலாத குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்க அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட சமூக நலன்புரித் திட்டம் அஸ்வெசும என்பதால்,விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அஸ்வெசும பயனாளிகளின் கோடிக்கணக்கான நிதி மோசடி - அதிகாரிகளின் பிணை நிராகரிப்பு | Financial Fraud Asvesuma Beneficiaries

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்கள் நோர்வூட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும பிரிவின் பொறுப்பாளராக இருந்த, ஹட்டன் டிக்கோயாவைச் சேர்ந்த 31 மற்றும் 32 வயதுடையவர்கள் ஆவர். இரு சந்தேக நபர்களைக் கைது செய்து, அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவுசெய்த பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின், நீதிபதி அவர்களை இன்று வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

பிணை நிராகரிப்பு

இதனைத் தொடர்ந்து இன்று(11) நீதிமன்றத்தில் சந்தேக நபர்களுக்காக ஆதரவாக முன்னிலையான வழக்கறிஞர்கள், இரு சந்தேக நபர்களும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு, மோசடி செய்யப்பட்ட பணத்தை வங்கிக் கணக்கில் மீண்டும் வரவு வைக்க ஒப்புக்கொண்டதால், அவர்கள் பிணை நிபந்தனைகள் ஏதுமின்றி விடுவிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

அஸ்வெசும பயனாளிகளின் கோடிக்கணக்கான நிதி மோசடி - அதிகாரிகளின் பிணை நிராகரிப்பு | Financial Fraud Asvesuma Beneficiaries

இதில் நீதிமன்றத்தில் சாட்சியங்களை முன்வைத்த ஹட்டன் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நோர்வூட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும நலன்புரித் திட்ட நிதி மோசடி தொடர்பில் மோசடி செய்யப்பட்ட பணம் குறித்த முழுமையான விசாரணை அறிக்கையை இன்னும் சமர்ப்பிக்கவில்லை என்றும், மேலும் நோர்வூட் பிரதேச செயலகத்தில் அலுவலகத்தில் உள்ள பல அதிகாரிகள் இந்த மோசடியில் ஈடுபட்டதாக வந்துள்ள கூடுதல் முறைப்பாடு குறித்தும் விசாரித்து வருவதால், சந்தேக நபர்களுக்குப் பிணை வழங்குவதை எதிர்ப்பதாகவும் தெரிவித்தனர்.

இரு தரப்பினரின் வாதங்களையும் பரிசீலித்த ஹட்டன் நீதிபதி பீட்டர் பால் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதன் காரணமாகவும் இந்த பயணம் ஏழைகளுக்கு வழங்கும் பணம் என்றும், இதுபோன்ற அரச பணத்திற்குப் பொறுப்பான அதிகாரிகளுக்குப் பணத்தை மோசடி செய்ய எந்த உரிமையும் இல்லை என்றும் கூறினார்.

இதற்கமைய, நீதிபதி இரு சந்தேக நபர்களையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கவும், இந்த மாதம் மீண்டும் 25ஆம் திகதி வழக்கினை மீண்டும் விசாரிக்கவும் உத்தரவிட்டார்.

மோசமாகும் மக்களின் நிலை

இரு சந்தேக நபர்களின் சகோதரர்களில் ஒருவர் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் உயர் பதவியில் உள்ள அதிகாரி எனவும், மேலும் மோசடிப் பணத்தின் ஒரு பகுதி அவரது கணக்கிலும் வரவு வைக்கப்பட்டிருந்தமை கண்டறிந்து அந்த அதிகாரிக்கு எதிராக நடத்தப்படும் விசாரணையின் விளைவாக, நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னக்கோன், அந்த அதிகாரியின் பணியை தற்காலிகமாக இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.

அஸ்வெசும பயனாளிகளின் கோடிக்கணக்கான நிதி மோசடி - அதிகாரிகளின் பிணை நிராகரிப்பு | Financial Fraud Asvesuma Beneficiaries

இதற்கிடையில், நோர்வூட் பிரதேச செயலகத்தின் அஸ்வெசும கணக்கில் பணம் வரவு வைக்கப்படாத பயனாளிகள், தங்கள் கணக்குகளைச் சரிபார்க்க தினமும் நோர்வூட் பிரதேச செயலகத்திற்குச் சென்று வருகின்றனர்.

அங்குள்ள அதிகாரிகள், பயனாளிகளின் கணக்கு எண் மற்றும் தொலைபேசி எண்ணைப் பெற்று, அது குறித்த தகவல்களை வழங்குவதாகக் கூறி, அந்த பொது மக்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.

அஸ்வெசும பயனாளிகளின் கோடிக்கணக்கான நிதி மோசடி - அதிகாரிகளின் பிணை நிராகரிப்பு | Financial Fraud Asvesuma Beneficiaries

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்

அரச தொழிலுக்காக காத்திருப்போருக்கு வெளியான அறிவிப்பு

அரச தொழிலுக்காக காத்திருப்போருக்கு வெளியான அறிவிப்பு

மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US