திருகோணமலையில் மாவீரர்கள் குடும்பங்களுக்கு நிதி உதவி
யுத்தத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் பத்து மாவீரர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூக மயப்படுத்தப்பட்ட நபர்களின் ஒன்றியத்தின் தலைவர் கந்தசாமி இன்பராசா தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
நிகழ்வில் செயலாளர் ஆறுமுகம் ஜோன்சன், திருகோணமலை மாவட்ட நிர்வாக உறுப்பினர்கள், மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
அத்தியாவசிய சீருடைகள்
பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் யோகச்சந்திரனின் நிதிப் பங்களிப்பில் அவரது பேரனான கிரிதரன் மற்றும் சுஜதா தம்பதிகளின் மகன் கிரிதரன் அர்ஜுனின் 09ஆவது பிறந்தநாள் நினைவாக இந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை, குறித்த கிராமத்தின் முன்பள்ளி மாணவர்களுக்கு அத்தியாவசிய சீருடைகளும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |