இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியாவின் புதிய உறுதிமொழி!
மொரகொட- நிர்மலா சந்திப்பு
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குவதாக இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்தார்.
இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவிடம், இந்த உறுதிமொழி நேற்று வழங்கப்பட்டுள்ளது.
புது தில்லியில் உள்ள இந்திய நிதியமைச்சில் நிர்மலாவை சந்தித்தபோது இந்த உறுதிமொழியை வழங்கப்பட்டது.

ஏற்கனவே 65,000 மெட்ரிக் டன் யூரியாவை இறக்குமதி செய்வதற்காக ஜூன் 10 ஆம் திகதி இந்தியாவினால் 55 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டன.
இதன் மூலம் பருவ பயிர்ச்செய்கைக்கு உரத்தை வழங்கக்கூடியதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
மொரகொட- ஜெய்சங்கர் சந்திப்பு
உயர்ஸ்தானிகர் மொரகொட, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரையும் அண்மையில் சந்தித்திருந்தார்.

தமிழக முதல்வரை இலங்கை வருமாறு அழைப்பு
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
இந்தியாவிற்கு வந்துகொண்டிருந்த ஈரான் கச்சா எண்ணெய் - திடீரென சீனாவிற்கு திரும்பிய கப்பல் News Lankasri
மீனாவை கொலை செய்ய ஆள் அனுப்பிய சிந்தாமணி.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து வாரம் நடக்கவிருப்பது இதுதான் Cineulagam