கிளிநொச்சி மேற்கு நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்ள குளங்களின் இறுதி விதைப்பு 31ஆம் திகதியுடன் நிறைவு
கிளிநொச்சி மேற்கு நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்ள 5 குளங்களின் இறுதி விதைப்பு திகதி எதிர்வரும் 31ஆம் திகதியுடன் நிறைவுறுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்கு நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழுள்ள அக்கராயன் குளம், வன்னேரிக்குளம், புதுமுறிப்பு குளம், கரியாலை நாகபடுவான் குளம், குடமுருட்டிகுளம் ஆகிய குளங்களின் கீழ் 2021, 2022 கால பயிர் செய்கை தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் பயிர் செய்கை நடவடிக்கைகளை நிறைவேற்றப்பட வேண்டும் என்று பயிர் செய்கை குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்பட்டி பயிர் செய்கை நடவடிக்கைகள் கடந்த மாதம் 5ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதாவது அக்கராயன் குளத்தில், குளத்தின் கீழ் 2887ஏக்கர் நிலத்திலும், கரியாலை நாகபடுவான் குளத்தில் 1505 ஏக்கர் நிலத்திலும், குடமுருட்டி குளத்தின் கீழ் 650 ஏக்கரிலும், புதுமுறிப்பு குளத்தின் கீழ் 985 ஏக்கர் நிலத்திலும், வன்னேரிகுளத்தின் கீழ் 363 ஏக்கரும் வழமை போன்று கால போக செய்கை நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
மேற்படி பயிர் செய்கை நடவடிக்கைகளை இம்மாதம் 31-ஆம் திகதிக்குள் நிறைவுறுத்த வேண்டும் என்றும் ஏற்கனவே மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற குறித்த பயிர் செய்கை குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக இவ்வாண்டு போக பயிர் செய்கை மேற்கொள்வதற்கு விவசாயிகளும் ஒத்துழைக்க வேண்டுமென
பயிர் செய்கை குழுவினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

தினமும் 300 ரூபாய்க்கு கூலி வேலை செய்து கொண்டே நீட் தேர்வில் தேர்ச்சி.., மதிப்பெண் எவ்வளவு தெரியுமா? News Lankasri

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri
