இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இறுதி தீர்மானம் இன்று..!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல்-2024 இல் யாருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக இன்று காலை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை கூடவுள்ளது.
இதன்போது தேசிய சபை கூடி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமது ஆதரவு யாருக்கு என்பது தொடர்பான இறுதி தீர்மானம் எட்டப்படும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்பீடம் அறிவித்துள்ளது.
தேசிய சபைக்கு அதிகாரம்
எனினும், அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதாக பல கட்சிகள் கையொப்பமிட்டு வருகின்ற நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இதுவரை எவ்வித கையொப்பமும் இடவில்லை.
அதற்கு தேசிய சபையின் அனுமதி இன்றி கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர், தவிசாளர் என எவரும் எவ்வித முடிவும் எடுக்கமுடியாது என அக்கட்சி தெரிவித்துள்ளது.
அந்த அளவுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தேசிய சபைக்கு அதிகாரம் உள்ளதாக அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தேசிய சபை மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானால் உருவாக்கப்பட்டதோடு, தேசிய சபையின் அங்கீகாரம் இன்றி கட்சியால் முடிவுகள் எடுக்கப்பட்டாலும் அம்முடிவுகள் செல்லுபடியாகாது என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 11 மணி நேரம் முன்

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan
