கோவிட் தடுப்பூசி பெற பண்டாரிக்குளம் கிராம அலுவலர் பிரிவு மக்களுக்கான இறுதி சந்தர்ப்பம்: சுகாதாரப் பிரிவினர்
வவுனியா - பண்டாரிக்குளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட மக்கள் நாளை செவ்வாய்க்கிழமை (28.12) கோவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் எனச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் சுகாதாரப் பிரிவினர் தெரிவிக்கையில்,
பண்டாரிக்குளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பண்டாரிக்குளம், உக்குளாங்குளம், ரகுபாக்கம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 20 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தமக்கான கோவிட் தடுப்பூசிகளை நாளை (28.12) காலை 9 மணியில் இருந்து 1 மணிவரை பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியில் பெற்றுக் கொள்ள முடியும்.
பண்டாரிக்குளம் கிராம அலுவலர் பிரிவு மக்களுக்கான இறுதிச் சந்தர்ப்பம் இதுவாகும். 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான முதலாவது டோஸ், இரண்டாவது டோஸ் தடுப்பூசிகளாக சினோபாம் தடுப்பூசியும், மூன்றாவது டோஸ் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசியும் ஏற்றப்படவுள்ளன.
இதனால் தடுப்பூசிகளைப் பெறாதவர்கள், முதலாவது டோஸ் மட்டும் போட்டவர்கள், இரண்டாவது டோஸ் வரை போட்டவர்கள் வருகை தந்து தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் மேலும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, எதிர்வரும் முதலாம் திகதி முதல் கோவிட் தடுப்பூசி அட்டைகள் பொது
இடங்களில் பயணிக்கும் போது கட்டாயமாக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
