விரைவில் மின்சார கட்டணத் திருத்த இறுதி முடிவு
மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதி முடிவு ஒக்டோபர் இரண்டாவது வாரத்தில் அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையகம் தெரிவித்துள்ளது.
மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பாக நடத்தப்படும் பொது கலந்தாய்வு அமர்வுகளின் போது சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை மதிப்பாய்வு செய்த பின்னர் இதற்கான முடிவு அறிவிக்கப்படும் என ஆணையகம் தெரிவித்துள்ளது.
இறுதி முடிவு
இந்தநிலையில், இந்த ஆண்டில், இலங்கை மின்சார சபையால் முன்மொழியப்பட்ட மூன்றாவது மின்சார கட்டண திருத்தம் தொடர்பாக நடைபெற்ற பொது ஆலோசனை கூட்டத்தின் போது சுமார் 500 பேர் தமது கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை சமர்ப்பித்தனர்.

செப்டெம்பர் 18ஆம் திகதி ஆரம்பமாகி அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய பொது கலந்தாய்வு நடவடிக்கைகள் மேல் மாகாணத்தில் தமது இறுதி அமர்வை நேற்று நடத்தியது.
முன்னதாக, உற்பத்தி, விநியோகம் மற்றும் நிதி ஆகியவற்றில் அதிகரித்து வரும் செலவுகளைக் காரணம் காட்டி, மின்சார சபை 6.8% கட்டண உயர்வைக் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.