இலங்கைக்கான சலுகைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் எடுக்கவுள்ள இறுதி முடிவு
இந்த வருடத்திற்கான பரிசீலனை முடிவடையும் போது இலங்கைக்கான ஜிஎஸ்பி பிளஸ் சலுகைகளை தொடர்வது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் தனது இறுதி முடிவை எடுக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து இறுதி அறிவிப்பு வெளியாகும் வரை, தற்போதுள்ள சலுகைகளை மேலும் நான்கு ஆண்டுகளுக்கு தற்காலிகமாக தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இறுதி முடிவு
ஐரோப்பிய ஒன்றியத்தின் இறுதி முடிவு அறிவிப்பு, இந்த ஆண்டின் இறுதி அல்லது ஜனவரி 2024 இல் கூட எந்த நேரத்திலும் வெளியாகலாம்.
அதன்போது தற்போதுள்ள சலுகைகள் நிறுத்தப்பட்டு புதிய முடிவுகள் நடைமுறைக்கு வரும்.
இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் சலுகையில் சாதகமான போக்கு இருப்பதாக ஆடைகள் சங்க மன்றத்தின் பேச்சாளர் யோஹான் லோரன்ஸ் சுட்டிக்காட்டினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |