திரைப்படமாகும் மகிந்த ராஜபக்சவின் வாழ்க்கை! நாமல் ராஜபக்சவுக்கு வந்த அதிரடி அழைப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வாழ்க்கைக் கதையை திரைப்படமாக உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த திரைப்படத் திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தயாரிப்பாளர் ஜயலத் பீரிஸ், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சிறையில் வைத்து சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நடிப்புத் திறமை இல்லை
இதன்போது, “நான் உங்கள் தந்தையின் கதாபாத்திரத்தை திரைப்படமாக உருவாக்கப் போகிறேன். நீங்கள் அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும்” என நாமல் ராஜபக்சவிடம் தயாரிப்பாளர் ஜயலத் பீரிஸ் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.

எனினும், அந்த அழைப்பை நிராகரித்த நாமல் ராஜபக்ச, தனக்கு நடிப்புத் திறமை இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மகிந்த ராஜபக்சவின் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான திறமையான நடிகர்கள் கேரள திரையுலகில் இருப்பதாகவும், அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நடிகர் ஒருவரைத் தெரிவு செய்வதற்கு தான் உதவுவதாகவும் நாமல் ராஜபக்ச உறுதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.