வேட்புமனு நிராகரிப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்! எம்.ஏ. சுமந்திரன் (photos)
முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச சபை தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்புமனு நிராகரிப்பட்டமை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கான வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமை தொடர்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் கள்ளப்பாடு பகுதியில் விசேட கூட்டம் ஒன்று நேற்று (24.01.2023) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் மற்றும் கட்சியினுடைய பொதுச் செயலாளர் சக்தியலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வேட்பு மனு நிராகரிப்பு
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எம் ஏ சுதந்திரன்,
'கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கான இலங்கை தமிழரசுக் கட்சியினுடைய வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமை தொடர்பாக முல்லைதீவு மாவட்ட கிளைக்கு பொறுப்பான சிலருடனும், இந்த தொகுதியினுடைய சிலருடனும், கரைத்துறைப்பற்று பிரதேச சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர்களோடும் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
இதிலே நாங்கள் இறுதியாக எடுத்த முடிவு முல்லைத்தீவு தெரிவித்தாட்சி அலுவலர் இலங்கை தமிழரசுக் கட்சியினுடைய வேட்பு மனுவை நிராகரிப்பதாக எடுத்த தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி, உடனடியாக உச்ச நீதிமன்றத்திலே வழக்கு ஒன்றை எழுத்தாணை கோரி தாக்கல் செய்யப்படும்.
அதிலே நிச்சயமாக நாங்கள் வெற்றி பெறுவோம் முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கான தேர்தலிலே இலங்கை தமிழரசு கட்சி போட்டியிடும் வெற்றியும் பெறும்” என தெரிவித்தார்.
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri