யாழ். மாநகர புதிய மேயராக பதவியேற்ற ஆர்னோல்டிற்கு புதிய சிக்கல்
யாழ் மாநகர புதிய மேயர் ஆர்னோல்டின் நியமனத்திற்கு எதிராக முன்னாள் யாழ் மாநகர மேயர் மணிவண்ணன் தரப்பினரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இன்று பிற்கல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மூன்று விடயங்களுக்கு எதிராக வழக்கு தாக்கு செய்யப்பட்டுள்ளதுடன் நாளைய தினம்(25.01.2023) வழக்கு விசாரணை எடுக்கப்படவுள்ளது.
ஆர்னோல்டிற்கு புதிய சிக்கல்
தேர்தல் கட்டளை சட்டத்தின் படி ஒரு முதல்வரை தேர்வு செய்ய முடியாது, பாதீடு தோற்கடிக்கப்பட்ட ஒருவர் முதல்வராக தெரிவு செய்வதற்கு இடம் இல்லை, அத்துடன் உள்ளூர் ஆட்சி உதவி ஆணையாளர் சபையில் கோரமில்லை என அறிவித்துவிட்டு சென்று சூட்சுமமான முறையில் வர்த்தமானி பிரசித்தமை போன்ற மூன்று விடயங்களுக்கு எதிராகவும் இ வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
யாழ். மாநகர சபையின் மேயராக மீண்டும் ஆர்னோல்ட் பதவியேற்றிருக்கும் இந்த சமயத்தில், அதனை கேள்விக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கானது ஆர்னோல்டிற்கு புதிய சிக்கலைத் தோற்றுவித்துள்ளது.
மேலதிக செய்தி-தீபன்

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.