ஆதாரத்தைக் கோரி சபையில் சண்டை! கஜேந்திரனுடன் மோதிய அமைச்சர் டக்ளஸ் (Video)
சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கிடையில் இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, கடற்தொழில் அமைச்சு இதுவரை எந்தவொரு அபிவிருத்தி நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என கஜேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், வடக்கு கிழக்கில் உள்ள கடற்தொழிலாளர்களோடு உரிய முறையில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவில்லை என்றும் கடற்தொழில் அமைச்சானது வடக்கு கிழக்கு கடற்தொழிலாளர்களோடு இணைந்து செயற்படுவதில்லை எனவும் குற்றம் சாட்டியிருந்தார்.
பலத்த தொனியில் வாக்குவாதம் இதற்கு பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சபையில் பொய்யான கருத்துக்களை வெளியிட வேண்டாம் எனவும், தமது குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்களை முன்வைக்குமாறும் கஜேந்திரனுக்கு கூறியுள்ளார்.
கஜேந்திரனை குழப்பும் வகையில் டக்ளஸ் தேவானந்தா குறுக்கீடு செய்து கருத்து வெளியிட்டதை தொடர்ந்து, இருவருக்கிடையில் பலத்த தொனியில் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்..
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 14 மணி நேரம் முன்
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan