யாழ். நகரில் குழுக்களிடையே மோதல் - தீயிட்டு எரிக்கப்பட்ட வாகனங்கள்
யாழில் புத்தாண்டு தினத்தில் இடம்பெற்ற முறுகல் காரணமாக இரு குழுக்களிடையே மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் - நாவாந்துறை பகுதியில் தகராறு காரணமாக இரண்டு வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.
குறித்த மோதல் சம்பவம் இன்று (15.4.2024) அதிகாலை 12.30 மணிக்கும் 3.00 மணிக்கும் இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் மேலதிக விசாரணை
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், புத்தாண்டு தினத்தில் இடம்பெற்ற முறுகல் காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
பட்டா ரக வாகனம் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்றுமே இவ்வாறு தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. இதில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரியவருகிறது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


அடேங்கப்பா முதல் நாளில் உலகம் முழுவதும் மாஸ் வசூல் வேட்டை செய்த அஜித்தின் குட் பேட் அக்லி... Cineulagam

தமிழகத்தில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள அஜித்தின் குட் பேட் அக்லி.. எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam

வெறும் வயிற்றில் சுடுநீர்+ நெய் குடிக்கிறீர்களா? 20 நிமிடத்துக்குப் பின் நிகழும் 7 மாற்றங்கள் Manithan

சவால்விடும் சூழ்நிலைகளையும் கூலாக கையாளும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
