கத்தி குத்து சம்பவத்தில் முடிவடைந்த பிக்குமாருக்கு இடையிலான சண்டை
கண்டி பேராதனை சுபோதாராமய குருக்குலத்தில் வசிக்கும் இரண்டு பிக்குமாருக்கு இடையில் நேற்று மாலை ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் ஒரு பிக்கு மற்றுமொரு பிக்குவை கத்தியால் குத்தியுள்ளார்.
24 வயதான பிக்குவை கத்தியால் குத்திய 16 வயதான பிக்கு

கத்தி குத்துக்கு இலக்கான பிக்கு கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கத்தியால் குத்திய பிக்குவை பேராதனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று மாலை 6 மணியளவில் நடந்துள்ளது. கொஸ்வத்தே சிறிதம்ம தேரர் என அழைக்கப்படும் 16 வயதான பிக்கு 24 வயதான இஹலகம தம்மஜித் என்ற தேரரை கத்தியால் குத்தியுள்ளார்.
கத்தி குத்துக்கு இலக்கான பிக்கு கண்டி வைத்தியசாலையில் 17வது விடுதியில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவத்துடன் தொடர்புடைய இளம் பிக்குவை பேராதனை பொலிஸார் நேற்றிரவே கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எதிர்நீச்சல் சீரியலில் வில்லன் ராவணன் ஆதிமுத்துவாக என்ட்ரி கொடுத்துள்ள நடிகர் இவர்தான்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri