இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஐம்பதை கடந்தது
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் வைரஸ், உலகம் முழுவதும் பரவிவருகின்ற நிலையில், இந்தியாவில் இத்தொற்றால் 53பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் டெல்லியில் 6 பேரும், மகாராஷ்டிராவில் 28 பேரும், ராஜஸ்தானில் 9 பேரும், கர்நாடகத்தில் 3 பேரும், குஜராத்தில் 4 பேரும், கேரளா, ஆந்திரா, மற்றும் சண்டிகரில் தலா ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஒமிக்ரோன் தொற்று பரவி வரும் நாடுகளிலிருந்து இந்தியாவிற்குள் வரும் பயணிகள் கோவிட் பரிசோதனை செய்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவர்கள் பரிசோதனை செய்வதற்கு முன்பதிவு செய்ய வேண்டும் எனவும் மத்திய விமானப் போக்குவரத்துத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி சென்னை, டெல்லி, ஹைதராபாத், மும்பை, கொல்கத்தா, பெங்களுர், மும்பை உள்ளிட்ட ஆறு இடங்களில் எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் முன்பதிவு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 22 மணி நேரம் முன்
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri