வாகன விபத்துக்களால் நேற்றைய தினம் மட்டும் 15 பேர் மரணம்
வாகன விபத்துக்கள் காரணமாக நேற்றைய தினத்தில் மாத்திரம் 15 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அண்மைய காலத்தில் வாகன விபத்துக்கள் காரணமாக ஒரு தினத்தில் அதிகளவானோர் இறந்தமை இதுவே முதல் முறை எனவும் அவர் கூறியுள்ளார்.
வாகன விபத்துக்களால் நேற்றைய தினம் 8 பேர் உயிரிழந்ததுடன் ஏனைய 7 பேர் படுகாமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளனர். இந்த 7 பேரில் இரண்டு பேர் பாதசாரிகள்.
வீதியில் நடந்து செல்லும் நபர்களின் உயிருக்குப் பாரதூரமான ஆபத்து ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்பற்ற வகையில் வாகனங்களை ஒட்டும் சாரதிகள் மற்றும் கவனக் குறைவாக வீதியில் செல்லும் பாதசாரிகளுக்கு இதற்குக் காரணம் எனவும் அஜித் ஹேரன குறிப்பிட்டுள்ளார்.
வீதிகளில் ஏற்படும் வாகன விபத்துக்களில் அதிகளவான விபத்துக்கள் மோட்டார் சைக்கிளால் ஏற்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 12 மணி நேரம் முன்
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri