ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ரொனால்டோ! அணியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு
இங்கிலீஷ் பிரீமியர் லீக் தொடரில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடிய ரொனால்டோ தற்போது அந்த அணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
“தன்னுடைய மகளுக்கு உடல்நிலை சரியில்லாததால் பயிற்சி முகாமில் பங்கேற்க இயலாது என்று சில மாதங்களுக்கு முன்பு ரொனால்டோ கூறியிருந்தார்.
இதனை மான்செஸ்டர் அணி நிர்வாகம் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.
கடுமையான விமர்சனம்

இதனால் கிறிஸ்டியானோ ரொனால்டோ , மான்செஸ்டர் அணியை கடுமையாக விமர்சனம் செய்ததுடன், மேலாளர் எரிக் டென் ஹாக் மீது தனக்கு "மரியாதை இல்லை" என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மான்செஸ்டர் யுனைடெட் அணி தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அணியை விட்டு உடனே விலகுகிறார். இரு தரப்பினரும் இணைந்து எடுத்த முடிவு இது என்று குறிப்பிட்டுள்ளது.
மான்செஸ்டர் அணிக்காக விளையாடிய ரொனால்டோவுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று அந்த அணி குறிப்பிட்டுள்ளது.
ரொனால்டோ

இதற்கு பதிலளித்துள்ள ரொனால்டோ மான்செஸ்டர், அணியில் இருந்து நான் விலகி உள்ளேன்.எனினும் ரசிகர்களுடன் உள்ள என்னுடைய பந்தம் என்றும் நீங்காது என்று குறிப்பிட்டுள்ளார்.
மான்செஸ்டர் அணிக்காக கிறிஸ்டியானோ ரொனால்டோ 346 போட்டிகளில் விளையாடி 145 கோல்களை அடித்திருக்கிறார்.
ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் அணிகளுக்கு இடையிலான இந்த பிரச்சினை அவருடைய உலகக் கோப்பை கவனத்தை சிதறடிக்கும் என கால்பந்து விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 17 மணி நேரம் முன்
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam