ரொனால்டோவின் சாதனையை முதல்முறையாக முறியடித்த மெஸ்ஸி!
காத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் பிரான்ஸ் அணியும் ஆர்ஜெண்டினா அணியும் மோதியிருந்ததுடன், பிரான்ஸ், ஆர்ஜெண்டினா இரண்டு அணிகளும் தலா 3 கோல் அடித்து பெனால்டியில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையில், நட்சத்திர வீரரான மெஸ்ஸி இந்த ஆட்டத்தில் பங்கேற்றிருந்ததுடன், மெஸ்ஸியின் கனவு ஞாயிற்றுக்கிழமை நனவாகி ஆர்ஜெண்டினா வெற்றி பெற்று சாதனை படைத்திருந்தது.
இதன்போது உலகக்கோப்பையை ஏந்தியபடி, இன்ஸ்டாகிராமில் மெஸ்ஸி பதிவேற்றிய புகைப்படம், ஐந்தரை கோடி லைக்குகளை பெற்றுள்ளது.

விளையாட்டு வீரர் ஒருவர் பதிவேற்றிய புகைப்படத்திற்கு இவ்வளவு லைக்குகள் கிடைப்பது, இதுவே முதல்முறை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ரொனால்டோவின் சாதனை
இதற்கு முன்னர், லூயி வுய்டோன் ஆடை நிறுவன விளம்பரத்திற்காக மெஸ்ஸியுடன் செஸ் விளையாடுவது போல் கிறிஸ்டியானோ ரொனால்டோ பதிவேற்றிய புகைப்படம், நான்கே கால் கோடி லைக்குகளை பெற்றிருந்தமையே அதிகப்பட்சமாகக் கருதப்பட்டது.
இந்நிலையில்,இன்ஸ்டாகிராமில் மெஸ்ஸி பதிவேற்றிய புகைப்படம், ஐந்தரை கோடி லைக்குகளை பெற்று ரொனால்டோவின் சாதனையை முறியடித்துள்ளார்.

இதேவேளை, உலகக்கோப்பையுடன் நாடு திரும்பிய அர்ஜென்டினா வீரர்களை வரவேற்க, அதிகளவில் ரசிகர்கள் குவிந்ததால், பேருந்து ஊர்வலத்தை கைவிட்ட வீரர்கள், ஹெலிகாப்டரில் வலம் வந்துள்ளனர்.

ரசிகர்களின் கூட்டத்தில் பேருந்து ஊர்ந்து சென்ற நிலையில், பேருந்து ஊர்வலம் கைவிடப்பட்டு, அணிவகுப்பு நடத்த திட்டமிட்ட பாதையில் ஹெலிகாப்டரில் வீரர்கள் வலம் வந்துள்ளனர்.
இதன்போது பேருந்து ஊர்வலம் கைவிடப்பட்டதற்கு பொலிஸாரே காரணம் என அர்ஜென்டினா கால்பந்து சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
பிரித்தானியாவின் மகிழ்ச்சியான நகரங்களின் தரவரிசை: வீடுகளின் விலையில் ஏற்பட்டுள்ள உயர்வு News Lankasri
பொருளாதார நெருக்கடியால் முடங்கியுள்ள ஈரான்... உடல் உறுப்புகளை விற்கும் நிலையில் மக்கள் News Lankasri
மின்னஞ்சலில் வந்த மிரட்டல்... ஐரோப்பிய நாடொன்றில் 6300 பாடசாலைகளில் மாணவர்கள் வெளியேற்றம் News Lankasri