பிஃபா உலகக்கிண்ண அவுஸ்திரேலிய அணியில் இலங்கை தமிழ் வீரர்
பிஃபா உலகக்கோப்பை 2026க்கான தகுதிகான் சுற்றில் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட நிஷான் வேலுப்பிள்ளை அவுஸ்திரேலிய தேசிய கால்பந்து அணியில் இடம்பிடித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை சீனாவுக்கு எதிராக இடம்பெற்ற ஆட்டத்தில், 23 வயதான நிஷான் வேலுப்பிள்ளை தனது முதல் கோலை அணிக்காக பெற்றுக்கொடுத்துள்ளார்.
Amazing to see another Tamil professional athlete - this time from Australia.
— Dr. Thusiyan Nandakumar (@Thusi_Kumar) October 12, 2024
Nishan Velupillay scored on his international debut for the Australian national team as they took on PR China last week.
More Tamil excellence ❤️💛💫
🎥 @Socceroos pic.twitter.com/rSQvIFtKEj
நிஷான் வேலுப்பிள்ளை
நிஷான் வேலுப்பிள்ளை 2019 முதல் அவுஸ்திரேலியாவில் எடிலெய்ட் யுனைடெட் அணிக்காக விளையாடி வருகிறார்.
பிஃபா உலகக்கோப்பை தகுதிச் சுற்று போட்டிகளில் அவுஸ்திரேலிய அணி தொடர்ந்து பின்னடைவை வந்த நிலையில், அணியின் மேலாளராக புதிதாக பொறுப்பேற்ற டோனி போபாவிக் வியாழக்கிழமை நடைபெற்ற சீனாவுக்கு எதிரான போட்டியில் நிஷான் வேலுப்பிள்ளையை அணிக்குள் இணைத்துக்கொண்டார்.
அறிமுக போட்டியில் முதல் கோல்
அவுஸ்திரேலிய அணிக்காக மாற்று வீரராக போட்டியின் 83ஆவது நிமிடத்தில் களம் நுழைந்த நிஷான் அடுத்த 7 நிமிடத்தில் தனது அறிமுக போட்டியில் முதல் சர்வதேச கோலை அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களித்தார்.
இந்நிலையில், அவர் அவுஸ்திரேலிய அணிக்காக கோல் அடித்த காணொளியும் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, நிஷான் வேலுப்பிள்ளையின் கோல் மூலம் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய கால்பந்து அணி, ஃபிஃபா உலகக்கோப்பை தகுதி வாய்ப்பை தக்கவைத்துள்ளது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |