FIFA உலகக் கிண்ண கால்பந்து! அர்ஜென்டினா அணியை வென்ற சவுதி அரேபியா
கட்டாரில் நடைபெற்று வரும் FIFA உலகக் கிண்ண கால்பந்து தொடரின் குரூப் ‘சி’ போட்டியில், உலகக் கிண்ணத்தை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட அர்ஜென்டினா அணியை சவுதி அரேபியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிகொண்டது.
இதன்மூலம் சவுதி அரேபியா எதிர்பாராத வெற்றியைப் பெற்று, குரூப் ‘சி’ பிரிவில் 3 புள்ளிகள் பெற்று முன்னிலை வகிக்கிறது.
முன்னதாக இந்த போட்டியின் போது, ஆர்ஜண்டீனாவின், லியோனல் மெஸ்ஸி முதல் கோலை,பெனால்டி மூலம் பெற்றுக்கொடுத்தார்.
சாதனை
இதன் மூலம் அவர், அர்ஜென்டினாவின் முன்னாள் சிறப்பு சாதனை வீரர், மரடோனாவின் சாதனையைக் கடந்தார்.
அத்துடன் நடப்பு உலகக் கிண்ணத்தில் பங்கேற்க்கும் இன்னொரு முன்னிலை வீரரும், போர்த்துக்கல் அணி தலைவருமான, கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சாதனையையும் சமன் செய்தார்.
வெற்றி
எனினும் ஆட்டத்தின் முதல் பாதிக்கு பின்னர், சவுதி அரேபியாவின் ஆட்டமும், அத்துடன் சவுதி அரேபியா கோல் காப்பாளர் அலோவைஸின் அபாரமான கோல் காப்பும் அரிய வெற்றியை அந்த அணிக்கு பெற்றுக் கொடுத்துள்ளது.
10-வது நிமிடத்தில் மெஸ்ஸி பெனால்டி உதை மூலம் சாதனை கோலை அடிக்க சவுதி அரேபியாவின் சலே அல் ஷெஹ்ரி 48-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்து சமன் செய்தார். அடுத்த 5 நிமிடத்தில் சலீம் அல் டவ்சாரி வெற்றிக்கான கோலை பெற்றுக்கொடுத்தார்.

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 21 மணி நேரம் முன்

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri
