உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி! கண் கலங்கிய வீரர்களுக்கு தோல்வியிலும் துணையாக நின்ற பிரான்ஸ் ஜனாதிபதி
கர்த்தார் உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி இன்று லுசைல் மைதானத்தில் 90,000 இரசிகர்கள் முன்னிலையில் விறுவிறுப்பாக இடம்பெற்று முடிந்தது.
கால்பந்து உலகக்கோப்பை 2022 தொடரின் இறுதிப்போட்டியில் இன்று ஆர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் ஆகிய அணிகள் மோதியிருந்தன.
வழங்கப்பட்ட ஆட்ட நேரத்தில் இரு அணிகளும் 3-3 என சமநிலையில் இருந்த நிலையில், பெனால்டி முறையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது.
உலகக்கிண்ணம் - ஆர்ஜண்டீனா சாம்பியன்
இதில் ஆர்ஜெண்டினா நான்கு முறை கோல்களை போட்டு வெற்றியை தனதாக்கிக்கொண்டது.இதன் மூலம் 36 ஆண்டுகளுக்கு பின்னர் மூன்றாவது முறையாக ஆர்ஜெண்டினா உலகக்கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், இறுதி போட்டியை பார்க்க கத்தார் சென்ற பிரான்ஸ் ஜனாதிபதி தோல்வியை தழுவி கண் கலங்கி நின்ற தமது நாட்டு வீரர்களை கட்டித்தழுவி ஆறுதல் கூறியுள்ளமை பார்ப்பவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை,நடப்பு உலக கோப்பை கால்பந்து தொடரில் 8 கோல்களை அடித்த பிரான்சின் எம்பாப்வேக்கு தங்க காலணி பரிசாக வழங்கப்பட்டுள்ளது.



விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam
