விறுவிறுப்பாக இடம்பெற்ற உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி! இறுதி முடிவு வெளியானது
கர்த்தார் உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி இன்று லுசைல் மைதானத்தில் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றது.
கால்பந்து உலகக்கோப்பை 2022 தொடரின் இறுதிப்போட்டியில் இன்று அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.
இறுதிப்போட்டி கோல் விபரம்
பலம் வாய்ந்த அர்ஜென்டினா அணி இந்த ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டியின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
பிரான்ஸை 4-2 என்ற கணக்கில் அர்ஜென்டினா வென்றள்ளது.
கடந்த முறை உலக சாம்பியனாக இருந்த பிரான்ஸை வீழ்த்தி 36 ஆண்டுகளுக்கு பின் கால்பந்து உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா வெற்றியை நிலை நாட்டியுள்ளது.
மூன்றாம் இணைப்பு
அர்ஜென்டினா மீண்டும் முன்னிலைக்கு வந்துள்ளது.
லியோனெல் மெஸ்ஸியின் இரண்டாவது கோல் மூலம் அர்ஜென்டினாவின் மூன்றாவது கோல் விழுந்துள்ளது.
மார்ட்டினெஸ் அடித்து லோரிஸ் தடுத்து பவுன்ஸ் ஆன பந்தை மெஸ்ஸி மீண்டும் அடித்து கோலாக்கியுள்ளார்.
இரண்டாம் இணைப்பு
பிரான்ஸுக்காக கிலியன் எம்பாப்பே ஒரு கோல் அடித்துள்ள நிலையில், அர்ஜென்டினாவும் பிரான்ஸும் தற்போது 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளனர்.
போட்டியின் நிர்ணயிக்கப்பட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்து சமநிலையில் உள்ளன.
இதன் விளைவாக, கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டுள்ளது.
விறுவிறுப்பாக போட்டி இடம்பெற்று வரும் நிலையில், பிரான்ஸின் ஒவ்வொரு தாக்குதலும் அர்ஜென்டினாவுக்கு பிரச்சினையாக மாறியுள்ளது.
எம்பாப்பே ஏழாவது கோலுடன், கோல்டன் பூட் பெறுவதற்கான போட்டியில் முன்னிலைக்கு வந்துள்ளார்.
முதலாம் இணைப்பு
அர்ஜென்டினாவின் முதல் கோல்
இதற்கமைய, ஆட்டம் தொடங்கிய 22 ஆவது நிமிடத்தில் பெனால்டியை பயன்படுத்தி போட்ட மெஸ்ஸி கோல் மூலம் அர்ஜென்டினா 1-0 என்ற கணக்கில் பிரான்ஸைவிட முன்னிலை பெற்றுள்ளது.
இறுதிப்போட்டி தொடங்கிய ஐந்து நிமிடங்களிலேயே லியோனெல் மெஸ்ஸி, ஹூலியன் ஆல்வாரெஸ், டி மரியா மூவரும் உருவாக்கிய கோல் வாய்ப்பு, அர்ஜென்டினா இரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.
அர்ஜென்டினாவின் இரண்டாவது கோல்
மீண்டும் பிரான்ஸ் அணியை திணறடித்து, முதல் பாதியில் அர்ஜென்டினா 2, பிரான்ஸ் 0. கோல் கணக்கில் பிரான்ஸை விட முன்னிலை பெற்றுள்ளதுடன்,36 ஆவது நிமிடத்தில் டி மரியா இரண்டாவது கோலை அடித்துள்ளார்.